ஒரே இறைவன் என சொல்ல வந்த நபிகளாரை ஏற்றுக் கொள்ளும் பலர் நபிகளாரை புறக்கணித்து விடுகின்றனர். அவரின் கருணையும் சிறப்புக்கள் என புத்தகம் புத்தகமாக எழுதி இருக்கப் பட்டாலும் இன்னும் சிலருக்கு அவர் பெயரை கேட்டால் வேப்பங்காயாகவே உள்ளது. எனவே அவரை பற்றிய பார்வைகளை பற்றி சற்று நடு நிலையாகவே இந்த பதிவை ஆராய வேண்டும். இல்லாவிட்டால் இது ஒருதலைபட்சமான பதிவு என்று புறந்தள்ளிவிடக் கூடும்.
முஸ்லிம்கள் அவரை தமது உயிருக்கு மேலே வைத்து உள்ளார்கள் என்பதை அவர்கள் செய்கைகளில் அடிக்கடி பார்க்கிறோம். அவரை பற்றி அவதூறு பரப்பினால் அவ்வளவுதான்.. ஒருவரின் சொந்த தாயை அசிங்கமாக பேசியவரை எப்படி புரட்டி எடுப்பார்களோ அப்படிதான் நபிகளாரை பற்றி அவதூறு பேசிய அந்த நபருக்கும் ஏற்படும்..
உலகில் பல பேருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவர். அப்படி ஒருவரை நினைகிறார்கள் என்றால், நபிகளார் அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளார் என்பதே உண்மை.. அவரின் பெயரைத்தான் அனேக முஸ்லிம்கள் அதிகமாக தனது பெயரோடு இணைத்து கொள்கின்றனர்.. இந்த உலகத்தில் முஹம்மத், அஹமத் என்னும் பெயரே அதிகமாக வைக்கப்பட்டு உள்ளது சற்றே ஆச்சரியமான விஷயம்தான். எனவே அவரை பற்றி முஸ்லிம்கள் சொல்வதை விட முதலில் முஸ்லிம் அல்லாத அறிஞர்களின் பார்வைகளை முதலில் பார்போம்:
நபிகள் நாயகத்தை பற்றி பிரபலங்களின் பார்வை:
"இந்த உலகத்திலேயே மிகவும் தலைசிறந்தவர் யார்? தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்? என்று Michael H Hart என்பவர் “THE 100” என்கிற புத்தகத்தில்(1978) தலைசிறந்த நூறு பேரை வரிசை படுத்தினார். உலக மாந்தர்களின் அணைத்து வரலாறுகளையும் முழுக்க படித்து மற்றவர்களின் வாழ்க்கை வராற்றுடுன் ஒப்பிட்டு செய்து நூறு பேரை தேர்வு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த டாப் 100 இடம் கிடைப்பதே என்பது அரிது உதாரணத்திற்கு நமது தேசப் பிதா வெள்ளையர்களை எதிர்த்து ஒரு மாபெரும் வெற்றி அடைந்த அவரே அதில் இல்லை. உனக்கு தெரியுமா முதல் இடம் யாருக்கு என்று? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்".
இப்படி சொன்னதின் மூலம் மைக்கேல் H ஹார்ட் பலருடைய புருவத்தை உயர்த்தி விட்டார், காரணம் இதை சொன்ன மைக்கேல் H ஹார்ட் ஒரு கிறிஸ்தவர். ஆம்.. அவர் கடவுளாக பாவித்த ஏசுவுக்கு அவர் கொடுத்த இடமோ மூன்று!! இதனால் அவர் விமர்சனமும் செய்யப்பட்டார் என்பது வேறு விஷயம். மேலும் மகான் புத்தருக்கு நான்காம் இடம்தான் மஹா வீரருக்கு நூறாவது இடம். புத்தர் எவ்வளவு பெரிய மகான் சாந்த சொரூபி அவருக்கு நான்காம் இடம் தான்... ஐன்ஸ்டீன் நியுட்டன் எல்லாம் டாப் டெணுக்குள் வந்தாலும் நம்பர் ஒன் நபிகள் நாயகமாம்.
லண்டன் டெய்லி மெயில் என்னும் பத்திரிக்கை மதிப்புரை எழுதும் போது“....எண்ணங்களை மாற்ற தயாராகுங்கள்.. ஹர்டினின் நூல் குறுகிய நோக்கமுடயதன்று...”
இவர் ரேங்கிங் கொடுக்கும் போது செல்வாக்கு உடையவர் என்பதை கருத்தில் இல்லமால் யார் இந்த மனித குலத்திற்கு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார் என்கிற அடிப்படையிலேயே அமைந்துஉள்ளது. மைக்கேல் ஹ் ஹார்ட் சொல்கிறார் நபிகள் நாயகத்தை தேர்வு செய்தற்கு காரணம் இரண்டு. முதலாவது இஸ்லாத்தின் இறைமை இல் அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபியே. இரண்டாவது இயேசு நாதரை போலல்லாமல் முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமன்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள்.”
உண்மைதான்.. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த தாக்கம் 14 நூற்றாண்டுகளை தாண்டி இன்றும் தொடர்கிறது. இன்னும்,
- ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகையில், “நான் அந்த அற்புத மனிதரின் வாழ்கையை படித்தேன். அவர் மனித இனத்தை அழிவில் இருந்தும் காப்பாற்ற போந்தவ்ர் என்பது என் கருத்து”
- டாக்டர் மு.வ.வரதராசனார் கூறுகையில்,“இரக்கமில்லா அரேபியரை இணையற்ற இதவாததால் துனைவராக்கிய வாய்மை நபிகளாரின் வெற்றி”என்கிறார்கள்.....
- தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா....( கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)..." திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
- அறிஞர் அண்ணா கூறுகையில், -நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், "1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறுதெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்லஎன்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்று கொண்டாட காரணம்" என்கிறார்.
இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை. இப்படி நபிகள் நாயகத்தை உயிருக்கு மேலே முஸ்லிம்கள் வைத்துள்ளது போல வேறு சிலருக்கு நபிகள் நாயகம்(ஸல்) என்கிற பெயரை கேட்டாலே முகம் மாறிவிடுகிறது.. இதற்கு அவர்கள் சொல்பவற்றை ஒவ்வொன்றாக இந்த கட்டுரையில் ஆராய்வோம். அதற்கு முன் ...
நபிகளாரை மற்றவர்கள் அவதூறாக பேச என்ன காரணம் என முஸ்லிம்களே சொல்பவை இதுதான்:
(1) மற்ற மதத்தினர் கொண்டுள்ள பல கடவுள் கொள்கையை தவறு என்று நபிகளார் சொல்வதால் அவர் மீது கோபம் கொண்டும் அவர் சொல்வதை நிராகரிகின்றனர்.. அது மட்டுமல்லாது மற்ற மதத்தினர் நபி மொழிகளை புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யவில்லை, விரும்பவில்லை ஏனெனில் எங்கள் கொள்கைகள் மட்டுமே சரி மற்றவர்கள் தவறே என்று பெருமை கொள்வதால் வரும் நிராகரிப்பு வருகிறது.
(2) எல்லா முஸ்லிம்களும் நல்லவர்களாக இருபதில்லை. அவ்வபோது ஆங்காங்கே அசிங்கமான நடவடிக்கைகளிலும், அச்சுறுத்தக் கூடிய செயல்களை செய்துவிட்டு நியாயப்படுத்துகின்றனர். அதனால் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீதோ அல்லது நபிகளாரின் மேல் ஏற்பட்ட கோபத்தின் விளைவு இது.
(3) இஸ்லாம் மேல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கட்டுக் கதைகளையும், பொய் புரட்டுகளையும், ஆதாரமற்ற நபி மொழிகள் ஆகியவற்றை உண்மை என்ன என்று ஆராயாமல் அப்படியே நம்புவது.
(4) சில அரை குறை இஸ்லாமிய அறிவு உள்ளவரின் சொற்களை அப்படியே நம்புவது
என லிஸ்டு கொடுக்கின்றனர். முஸ்லிம்கள் சொல்வதை அப்படியே நாம் புறக்கணிக்க முடியாது என்னும் போது அப்படி என்றால் நபிகள் நாயகத்தை பற்றிய செய்திகளை எப்படித்தான் எடுத்துக் கொள்வது என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமே..
நபிகளார் பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார் என்பது இவர்கள் சொல்வதில் பல நபி மொழிகளை இஸ்லாமிய அறிஞர்கள் நிராகரித்து விடுவதில் இருந்து தெரிகிறது எனவும் கருத இடமுண்டு. உதாரணமாக நபிகள் நாயகம் சொன்னதாக ஏதும் செய்த வந்தால், "யார் கேட்டார்? கேட்டவர் எப்படிப்பட்டவர்? அவர் வாழ்க்கை எப்படி இருந்தது? " என்று ஆராய்ந்து பிறகே ஏற்கின்றனர். இதை செய்வதற்கு "நபி மொழி பகுப்பாய்வு" என ஒரு தனி கலையையே வைத்து இருகின்றனர்.
முடிவாக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? முறையான ஆய்வுக்குப் பிறகு நல்ல செய்திகளை தனியே பிரித்துவிட முடியும். நபியுடன் தொடர்பில்லாத பலவீனமான செய்திகளையும் தனியே பிரித்துவிட முடியும். இந்த வகையில் நபிமொழிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.
பாதுகாக்கப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் குர்ஆனுக்கு விளக்கமாகவும் தனிமனிதனை நல்வழிப்படுத்தகூடியதாகவும் அமைந்துள்ளன. ஆனால் பலவீனமான பொய்யான ஹதீஸ்கள் பெரும்பாலும் குர்ஆனுக்கு எதிராகவும் மனிதனை மானக்கேடான வழிக்கு இழுத்துச் செல்லக்கூடியதாகவும் அமைந்துள்ளன.
இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தை விமர்சிப்பதற்குப் பெரும்பாலும் பொய்யான ஹதீஸ்களையே முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக எடுத்துக் கொள்கின்றனர் என்பதே முஸ்லிம்கள் வைக்கும் குற்றசாட்டு.
(ம்ம்ம்.. தொடருவோம்)
முஸ்லிம்கள் அவரை தமது உயிருக்கு மேலே வைத்து உள்ளார்கள் என்பதை அவர்கள் செய்கைகளில் அடிக்கடி பார்க்கிறோம். அவரை பற்றி அவதூறு பரப்பினால் அவ்வளவுதான்.. ஒருவரின் சொந்த தாயை அசிங்கமாக பேசியவரை எப்படி புரட்டி எடுப்பார்களோ அப்படிதான் நபிகளாரை பற்றி அவதூறு பேசிய அந்த நபருக்கும் ஏற்படும்..
உலகில் பல பேருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவர். அப்படி ஒருவரை நினைகிறார்கள் என்றால், நபிகளார் அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளார் என்பதே உண்மை.. அவரின் பெயரைத்தான் அனேக முஸ்லிம்கள் அதிகமாக தனது பெயரோடு இணைத்து கொள்கின்றனர்.. இந்த உலகத்தில் முஹம்மத், அஹமத் என்னும் பெயரே அதிகமாக வைக்கப்பட்டு உள்ளது சற்றே ஆச்சரியமான விஷயம்தான். எனவே அவரை பற்றி முஸ்லிம்கள் சொல்வதை விட முதலில் முஸ்லிம் அல்லாத அறிஞர்களின் பார்வைகளை முதலில் பார்போம்:
நபிகள் நாயகத்தை பற்றி பிரபலங்களின் பார்வை:
"இந்த உலகத்திலேயே மிகவும் தலைசிறந்தவர் யார்? தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்? என்று Michael H Hart என்பவர் “THE 100” என்கிற புத்தகத்தில்(1978) தலைசிறந்த நூறு பேரை வரிசை படுத்தினார். உலக மாந்தர்களின் அணைத்து வரலாறுகளையும் முழுக்க படித்து மற்றவர்களின் வாழ்க்கை வராற்றுடுன் ஒப்பிட்டு செய்து நூறு பேரை தேர்வு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த டாப் 100 இடம் கிடைப்பதே என்பது அரிது உதாரணத்திற்கு நமது தேசப் பிதா வெள்ளையர்களை எதிர்த்து ஒரு மாபெரும் வெற்றி அடைந்த அவரே அதில் இல்லை. உனக்கு தெரியுமா முதல் இடம் யாருக்கு என்று? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்".
இப்படி சொன்னதின் மூலம் மைக்கேல் H ஹார்ட் பலருடைய புருவத்தை உயர்த்தி விட்டார், காரணம் இதை சொன்ன மைக்கேல் H ஹார்ட் ஒரு கிறிஸ்தவர். ஆம்.. அவர் கடவுளாக பாவித்த ஏசுவுக்கு அவர் கொடுத்த இடமோ மூன்று!! இதனால் அவர் விமர்சனமும் செய்யப்பட்டார் என்பது வேறு விஷயம். மேலும் மகான் புத்தருக்கு நான்காம் இடம்தான் மஹா வீரருக்கு நூறாவது இடம். புத்தர் எவ்வளவு பெரிய மகான் சாந்த சொரூபி அவருக்கு நான்காம் இடம் தான்... ஐன்ஸ்டீன் நியுட்டன் எல்லாம் டாப் டெணுக்குள் வந்தாலும் நம்பர் ஒன் நபிகள் நாயகமாம்.
லண்டன் டெய்லி மெயில் என்னும் பத்திரிக்கை மதிப்புரை எழுதும் போது“....எண்ணங்களை மாற்ற தயாராகுங்கள்.. ஹர்டினின் நூல் குறுகிய நோக்கமுடயதன்று...”இவர் ரேங்கிங் கொடுக்கும் போது செல்வாக்கு உடையவர் என்பதை கருத்தில் இல்லமால் யார் இந்த மனித குலத்திற்கு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார் என்கிற அடிப்படையிலேயே அமைந்துஉள்ளது. மைக்கேல் ஹ் ஹார்ட் சொல்கிறார் நபிகள் நாயகத்தை தேர்வு செய்தற்கு காரணம் இரண்டு. முதலாவது இஸ்லாத்தின் இறைமை இல் அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபியே. இரண்டாவது இயேசு நாதரை போலல்லாமல் முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமன்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள்.”உண்மைதான்.. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த தாக்கம் 14 நூற்றாண்டுகளை தாண்டி இன்றும் தொடர்கிறது. இன்னும்,
- ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகையில், “நான் அந்த அற்புத மனிதரின் வாழ்கையை படித்தேன். அவர் மனித இனத்தை அழிவில் இருந்தும் காப்பாற்ற போந்தவ்ர் என்பது என் கருத்து”
- டாக்டர் மு.வ.வரதராசனார் கூறுகையில்,“இரக்கமில்லா அரேபியரை இணையற்ற இதவாததால் துனைவராக்கிய வாய்மை நபிகளாரின் வெற்றி”என்கிறார்கள்.....
- தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா....( கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)..." திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
- அறிஞர் அண்ணா கூறுகையில், -நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், "1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறுதெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்லஎன்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்று கொண்டாட காரணம்" என்கிறார்.
இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை. இப்படி நபிகள் நாயகத்தை உயிருக்கு மேலே முஸ்லிம்கள் வைத்துள்ளது போல வேறு சிலருக்கு நபிகள் நாயகம்(ஸல்) என்கிற பெயரை கேட்டாலே முகம் மாறிவிடுகிறது.. இதற்கு அவர்கள் சொல்பவற்றை ஒவ்வொன்றாக இந்த கட்டுரையில் ஆராய்வோம். அதற்கு முன் ...
நபிகளாரை மற்றவர்கள் அவதூறாக பேச என்ன காரணம் என முஸ்லிம்களே சொல்பவை இதுதான்:
நபிகளாரை மற்றவர்கள் அவதூறாக பேச என்ன காரணம் என முஸ்லிம்களே சொல்பவை இதுதான்:
(1) மற்ற மதத்தினர் கொண்டுள்ள பல கடவுள் கொள்கையை தவறு என்று நபிகளார் சொல்வதால் அவர் மீது கோபம் கொண்டும் அவர் சொல்வதை நிராகரிகின்றனர்.. அது மட்டுமல்லாது மற்ற மதத்தினர் நபி மொழிகளை புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யவில்லை, விரும்பவில்லை ஏனெனில் எங்கள் கொள்கைகள் மட்டுமே சரி மற்றவர்கள் தவறே என்று பெருமை கொள்வதால் வரும் நிராகரிப்பு வருகிறது.
(2) எல்லா முஸ்லிம்களும் நல்லவர்களாக இருபதில்லை. அவ்வபோது ஆங்காங்கே அசிங்கமான நடவடிக்கைகளிலும், அச்சுறுத்தக் கூடிய செயல்களை செய்துவிட்டு நியாயப்படுத்துகின்றனர். அதனால் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீதோ அல்லது நபிகளாரின் மேல் ஏற்பட்ட கோபத்தின் விளைவு இது.
(4) சில அரை குறை இஸ்லாமிய அறிவு உள்ளவரின் சொற்களை அப்படியே நம்புவது
(3) இஸ்லாம் மேல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கட்டுக் கதைகளையும், பொய் புரட்டுகளையும், ஆதாரமற்ற நபி மொழிகள் ஆகியவற்றை உண்மை என்ன என்று ஆராயாமல் அப்படியே நம்புவது.
என லிஸ்டு கொடுக்கின்றனர். முஸ்லிம்கள் சொல்வதை அப்படியே நாம் புறக்கணிக்க முடியாது என்னும் போது அப்படி என்றால் நபிகள் நாயகத்தை பற்றிய செய்திகளை எப்படித்தான் எடுத்துக் கொள்வது என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமே..
நபிகளார் பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார் என்பது இவர்கள் சொல்வதில் பல நபி மொழிகளை இஸ்லாமிய அறிஞர்கள் நிராகரித்து விடுவதில் இருந்து தெரிகிறது எனவும் கருத இடமுண்டு. உதாரணமாக நபிகள் நாயகம் சொன்னதாக ஏதும் செய்த வந்தால், "யார் கேட்டார்? கேட்டவர் எப்படிப்பட்டவர்? அவர் வாழ்க்கை எப்படி இருந்தது? " என்று ஆராய்ந்து பிறகே ஏற்கின்றனர். இதை செய்வதற்கு "நபி மொழி பகுப்பாய்வு" என ஒரு தனி கலையையே வைத்து இருகின்றனர்.முடிவாக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? முறையான ஆய்வுக்குப் பிறகு நல்ல செய்திகளை தனியே பிரித்துவிட முடியும். நபியுடன் தொடர்பில்லாத பலவீனமான செய்திகளையும் தனியே பிரித்துவிட முடியும். இந்த வகையில் நபிமொழிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.