இறைவன் தன்னை குறித்து, தன் பண்புகளை குறித்து என்ன சொல்லி உள்ளானோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அதற்க்கு மேல் சிந்திக்க கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
உருவமற்ற இறைவன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் “தான் உருவமற்றவன் என்று அவன் குரானில் கூறவில்லை, இறைத்தூதரும் கூறவில்லை.”
(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே- மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:26-27)
(இன்னும் பார்க்க 2:115,2:272,13:22,30:38-39,76:9,92:20,6:52,18:28,28:88)
“அல்லாஹ்வின் திருமுகத்தின் பொருட்டால் சொர்கத்தை தவிர வேறொன்றையும் கேட்கக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: அபூதாவூத்)
நிச்சயமாக ஆதமுடைய மக்களின் இதயங்கள் அனைத்தும் ரஹ்மானின் விரல்களில், இருவிரல்களுக்கு மத்தியில் ஓரே ஒரு இதயத்தை போன்று உள்ளது. அவன் விருப்பப்படி அவற்றை திருப்புகிறான், இயக்குகிறான்” என்று நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)
மேற்சொன்னவற்றில் இருந்து அந்த இறைவனுக்கு அழகிய திருமுகம், கை, கால்கள்,உண்டு,அவன் பார்க்கிறான், கேட்கிறான், கோபப்படுகிறான், திருப்தி அடைகிறான்”, என்றெல்லாம் திருக்குரானும், ஹதீசுகளும் கூறுகின்றன.
இந்து வேதங்கள்:
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன்.40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
இறைவன் உருவமற்றவன் என்று சொல்வதற்கான பொருள் மனிதர்களாகிய நாம் கற்பனை செய்யும்/செய்கிற உருவம் இல்லாதவன் என்கிற அடிப்படையில்தான்.
உண்மையாக இறைவனுக்கு உருவம் உள்ளதா என்று கேட்டால், ஆமாம் என்றே சொல்ல வேண்டும் ஏனெனில், இறைவன் தன்னை உருவமற்றவன் என்று கூறிக் கொள்ளவில்லை.
ஆனால் குர்ஆனில் அவன் தன்னை உருவமற்றவன் என்று கூறாததால் அவ்வாறு கூறுவதை தவிர்த்தல் நலம்.
உண்மையாக இறைவனுக்கு உருவம் உள்ளதா என்று கேட்டால், ஆமாம் என்றே சொல்ல வேண்டும் ஏனெனில், இறைவன் தன்னை உருவமற்றவன் என்று கூறிக் கொள்ளவில்லை.
ஆனால் குர்ஆனில் அவன் தன்னை உருவமற்றவன் என்று கூறாததால் அவ்வாறு கூறுவதை தவிர்த்தல் நலம்.
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
கற்பனை வளம் மிக்க மனிதர்களால் ஏற்படும் பிரச்னை:
அவனைபோல்எப்பொருளும்இல்லை,அவனை பார்வைகளால் அடைய முடியாது -
என்பதற்கு மாற்றமாக இந்த மனிதர்களின் செயல் உள்ளது, ஆனால் அதை பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்வது இல்லை, தன் விருப்பதிர்கேற்ப அவனை சிலையாக வடிப்பார்கள்.
அவனின் ஒவ்வொரு குனாதியசிய திர்க்கும் ஏற்றவாறு சிலைகள் உருவாகிறது. பிறகு ஒவ்வொரு சிலைகளுக்கும் சிறப்புகள் என்று மனிதர்கள் கற்பனை/கதை கட்ட ஆரம்பிப்பார்கள். இதற்க்கு முடிவே கிடையாது, ஒவ்வொரு பண்டைய சமய குருக்களும் இப்படித்தான் அவர்கள் கற்பனைகளை/விளக்கத்தை, அந்த சிலைகளின் மேல் திணித்து திணித்து உண்மையான அந்த இறைவனை விட்டு விட்டு இந்த சிலைகளின் பின் மக்கள் ஓடலாயினர்.
அரியும் சிவனும் ஒண்ணு,அதை அறியாதவன் வாயில் மண்ணு' என்று சொல்வார்கள் ஆனால் எத்தனை பேர் அப்படி அந்த பரம் பொருளை வணங்குகின்றனர்? கடைசியில் ஒன்றுமே இல்லாத இவர்கள் உருவாகிய கடவுளைதான் வழிபடுவர் . பல்வேறு கடவுள்களுக்கு இடையே இது என் இஷ்ட தெய்வம், மேலும் அது என் குலதெய்வம் என்று வேறு சொல்லிக் கொண்டு நாங்கள் ஒரே இறைவனை வழிபடுகிறோம் என்று சொல்வது எப்படி ஒரு கடவுள் கொள்கை? எல்லாம் பொய்! சாமானிய மக்களை கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இந்த சிலைகள் அணைத்தும் இறைவன் என்று.
அந்த இறைவனுக்கு நிகரானவர் எவரும் இலர் -
என்பதும் இப்படி பல சிலைகள் வணக்கத்தால் ஓர் ஒப்புயர்வற்ற அந்த ஒரு இறைவனின் சந்நிதானம் இல்லாத பல கடவுள் வழிபாடானது!
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)
“இறைவன் பிறப்பற்றவன், குடும்பம், குட்டி அட்றவன்”
அந்த ஒவ்வொரு சிலைகளுக்கும் தெய்வீக தன்மை என்று கூறி அந்த சிலைகளுக்கு இடையேயும் உறவு முறைகளை ஏற்படுத்தி, இந்த சிலை மனைவி, இந்த சிலை மகன்கள் என்று குடும்ப அமைப்பை ஏற்படுத்தி, “இறைவன் பிறப்பற்றவன், குடும்பம், குட்டி அட்றவன்” என்கிற விஷயத்தை தகர்தே விட்டார்கள். மற்றொரு சிலைக்கு வேறு மனைவி என்கிற தத்துவம் சொல்லி, ஒரு கடவுள் கொள்கை பல கொள்கையானது, உண்மையான ஒரு தெய்வம் என்கிற அரசாட்சி, வழிபாடு இல்லாத பல கடவுள்களுக்கு மத்தியில் பங்கு கொள்ளப் படவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.
அவனால் முடியாதது என்ன? அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தியுள்ளவன் –
என்பதிற்கு எதிராக கல்விக்கு ஒரு சாமி பிள்ளை வரம் வேண்டி மற்றொரு சாமி, பொருள் வரம் வேண்டி என்று இன்னொரு சாமி என்று எல்லாம் வல்ல பரம் பொருளை கூறு போட்டு பல கடவுள்களாக ஆக்கி இந்தக் கடவுளுக்கு குறிப்பிட்ட சக்தி உண்டு மற்றதர்கில்லை எனவும், இது அதை விடவும் சக்தியுள்ளது என்று பாரபட்சம் வேறு. சுருக்கமாக சொல்வதென்றால் கடவுளுக்கும் சில சக்தி உண்டு சில சக்தி இல்லை என்கிற வாதம், இறைவனின் வல்லமையை கேள்வி கூத்தாக்கி விடுகிறது! கேட்டால் அதற்க்கும் ஒரு கதை இவர்கள் சொல்கிறார்கள்.
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்
குர்ஆன் கூறுகிறது:
...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)
மேலும் ஒரே இறைவன் பலவாக ஆக முடியாதா? –
என்கிற இவர்களது கேள்வியில் நியாயம் இல்லை, அவனே பலவாக மாற அவசியம் இல்லை, அவனுக்கு இவர்கள் சிந்தனைகளை ஓட விட்டு, "சிவபெருமான் அந்த நெருப்பு ஆகவும் , அதன் சிவப்பு நிறம் வினாயகன் ஆகவும்,அதன் சூடு சக்தி ஆகவும், அதன் உஷ்ணம் ஸ்கந்தன் ஆகவும்" சொல்கிறார்கள். எவர்களுடைய எல்லா செயல்களுக்கும் தத்துவ கதைகள் தான்..
மேலும் கேளுங்கள் இவர்கள் சொல்வதை, "நாம் நெருப்பை முதலில் பார்க்கும் பொழுது,அதன் சிவப்பு வர்ணம் தான் தென்படுகிறது....இதனால் தான், வினாயகனை முதலில் வழிவடுகின்றனர்.... வினாயகன், சக்தி, ஸ்கந்தன் சிவபெருமான் வெவ்வேறுயில்லை, ஒரே பரப்பிரமத்தின் வெவ்வேறு ரூபங்கள் தாம்.... வேதம் பல கடவுள்கள் என்று சொல்லாது, சொல்லவுமில்லை.....சைவர்களுக்கு,சிவபெருமானே ஒரே இறைவன், வைஷ்ணவர்களுக்கு விழ்ணு, சாக்தர்களுக்கு சக்தி, சௌர சமயத்தவர்களுக்கு சூரியன், காணபதிய சமயத்தவர்களுக்கு கணபதி மற்றுன் கௌமார சமயத்தினருக்கு ஸ்கந்தன்....இவர்கள் எல்லோரும் ஒருவரே, மக்களின் விருப்பத்திற்கேற்ப, ஒரு கடவுளை தங்கள் இஷ்ட மூர்த்தியாக ஏற்கின்றனர்...வைஷ்ணவ சமயமும் சைவ சமயமும் வெவ்வேறு தத்துவங்களை கொண்டன.சைவத்தில் முழுமுதற் கடவுள் சிவன்.விஷ்ணு ஒரு தேவன்,சிவனின் பக்தன்.வைணவத்தில் தலைகீழாக இருக்கும்.அவ்வளவே."
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.
''ஏகம் எவதித்யம்" - ''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"
உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.
உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது
குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
மேலே சொன்னவை எல்லாம் இறைவனை ஒரு நெருப்பாக உருவகப் படுத்தி அதில் இருந்து,
· நிறத்திற்கு ஒரு கடவுளையும்,
· சூட்டிற்கு இன்னொரு கடவுளையும்,
· உஷ்ணத்திற்கு இன்னொரு கடவுளையும்,
மேலும் தாய்-மகன் என்கிற கற்பனையையும் ஆக இஷ்டதிற்கு உருவகப் படுத்தியும், மிகை படுத்தியும் உண்மையான இறைவனை இவர்கள் இழந்தே விட்டார்கள், இவர்கள் பின்னலில் எழுதிக் கொண்ட வேதத்திற்கும் இவர்களின் ச்யல்பாடுகளுக்கும் கூட ஒற்றுமை இல்லை, ஆனால் அந்த கதைகளை நியாய படுத்த வேறு பல கதைகளையும் சொல்வார்கள், மேலும் எங்கள் வாயை மூட உங்களுக்கு வேத ஞானம் இல்லை என்றும் சொல்வார்களே ஒழிய சிந்திக்க மாட்டார்கள்.
"ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!" கடவுள் கோட்பாடுகளை பற்றி இவர்கள் குருக்கள் ஆசாமிகள் எழுதிய புத்தகங்களை நாம் மேற்கோள் காட்டுவதை இவர்கள் கவனிக்க மாட்டார்களா?
பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.
ஆனாலும் இன்னும் பலர் மெய்ஞானம் கண்டவருக்கு சிலைகள் தேவை இல்லை அவர்களுக்கு அது தெரியும் என்றும், மேலும் இந்த சிலைகள் மூலமாக இறைவனை சாமானியர்கள் அடைய செய்யும் ஒரு கருவி என்றே இன்றும் வாதிடுகின்றனர்.
என்ன வகையான வழிபாடு உள்ளது?
இவர்கள் கூற்றுப் படி, வேத மதத்தில் உருவ,அருவுருவ,அருவ வழிபாடுகள் இருக்கின்றன.
உருவ வழிபாடு
இறைவன் ரிஷிகளுக்கு தந்த அற்புத காட்சிகளை கொண்டு ,சிலைகளை செய்து வணங்குவது முதல் படி.
அருவுருவ வழிபாடு
சிலைகளுக்கு அந்தந்த சடங்குகளை செய்தால்,அதற்கு மந்திர சக்தி வருகிறது.சிலைகள் உருவ வழிபாடு.நெருப்பும் இலிங்கமும் அருவுருவ வழிபாடு.
அருவ வழிபாடு
இது கடைசி வழிபாடு. இந்த அருவ வழிபாட்டில்,மனதில் இறைவனை நினைத்து தியானத்தில் இருக்க வேண்டும்.இந்த வழிபாட்டை பொதுவாக சாதுக்கள்,ஞானிகள்,முனிவர்கள் தான் செய்வார்கள். மேலும்...
எல்லோரும் ஞானியாக பிறப்பதில்லை,ஆதலால் வேத மதத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரி வழிபாட்டு முறையை வைக்கவில்லை.எல்லோரும் பக்குவமடைந்த ஞானத்தை பெற்றவர்களில்லை.அவர்கள் பக்குவத்திற்கேற்ப அவர்கள் வழிபடலாம் என்பது இவர்கள் வாதம்.
ஆனால் கீழ்க்கண்ட வசனங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்...
" அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை. " என்று சாட்சி கூறும் ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். (40:9 ) யஜீர்வேத சம்ஹிதா
இதனால்தான் நபிகளார் உருவ வழிபாடை தடை செய்து அவனது படைப்புக்களை பற்றி சிந்தனை செய்யுமாறும் அவனது உள்ளமையை பற்றி சிந்திப்பதை தடுத்துவிட்டார்கள்,
அதனால் இறைவனை நாங்கள் உருவமற்ற வகையிலே, உருவகப் படுத்தாமல், அவன் அப்படி இருப்பான், இப்படி இருப்பான் என்று கற்பனைகளை கலக்காமல் அப்படியே வழிபடுகிறோம்!
அதனால் இறைவனை நாங்கள் உருவமற்ற வகையிலே, உருவகப் படுத்தாமல், அவன் அப்படி இருப்பான், இப்படி இருப்பான் என்று கற்பனைகளை கலக்காமல் அப்படியே வழிபடுகிறோம்!
கடவுள் மற்றும் கோட்பாடுகளை பற்றி விவாதிக்கும் போது நாங்கள் உங்களை போல் ஒரு இறைவன் ஒரு தூதர் என்று குறுகிய மனப் பான்மையில் சிக்காமல் பரந்த எண்ணம் உடையவர்கள் உடையவர்களாக இருக்கிறோம் என்கிறார்கள், மேலும் உங்கள் இறைவனுக்கும் குறிகிய மனப்பான்மை அதனால்தான் பிற தெய்வத்தை வழிபடுவதை அவன் எரிச்சல் படுகின்றான், ஐயோ என்ன வகையான எரிச்சலுள்ள தெய்வமிது என்று ஏளனம் செய்கின்றனர்.
யார்தான் தன்னுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்வதை விரும்புவார்கள்? அதுவும் மக்கள் அவனிடம் கேட்பதை விட்டு இல்லாத இறைவனிடம் கேட்கும் போது இறைவன் துனுக்குரமாட்டானா? ரெஸ்பான்ஸ் பண்ணியிருக்க் மாட்டானா? பண்ணியுள்ளான் என்று எங்கள் சொல்லுக்கு பலமாக சிலை வணங்கிகள் மறுக்கிறார்கள், ஏற்றுக் கொள்வதில்லை, பல்வேறு காரணங்கள் கூறி நியாயபடுதவே முயல்கிறார்கள்
ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)
40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538
"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" -
இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர்.
காலம் காலமாக முன்னோர்களின் வழிவழியாக வந்த இந்த பழக்கத்தை விட்டுவிட மனம் இடம் கொடுக்கவில்லை அவர்களுக்கு! அது அவர்கள் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் சரியே! அதை எவரேனும் சுட்டி காட்டினால், உனக்கு என்ன தெரியும் என்று கோபப் படுகின்றார்கள்.
ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)
உண்மையை சொல்வதென்றால் சொல் செயல் ஓரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பதை பலர் உணர்வதில்லை.
தங்கள் செயல்களை நியாயம் செய்தே, இறைவனின் நியாயமான விருப்பதிர்கேதேராக மன ஊசலாடத்தின் படி, ஷைத்தானை பின்பற்றுகின்றனர்.
தங்கள் செயல்களை நியாயம் செய்தே, இறைவனின் நியாயமான விருப்பதிர்கேதேராக மன ஊசலாடத்தின் படி, ஷைத்தானை பின்பற்றுகின்றனர்.
நீங்கள் நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் அணைத்து வேதங்களும் ஓரே அந்த உருவமற்ற முறையில் இறைவனை மட்டும் வழிபட தாங்கி நிற்கும் பொதுவான விஷயம் என்பது புலப்படும். மேலும் அதற்கு முரணாக செயல் படுபவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை(நரகம் பற்றி) செய்வதாகவும் இருக்கும்,
உண்மையில் இறைவன் அவனியன்றி அவன் அல்லாத பிறவற்றை இறைவன் என்று அழைப்பதை விரும்புவது இல்லை , மக்களும் அகங்காரத்துடன் மனோ இச்சையை பின்பற்றி அதிலேயே பெருமை கொண்டு இருக்கிறார்கள், உண்மையை ஏற்க்க அவர்களது பெருமை தடுத்துவிடுகிறது, அவர்களுக்கு இருள்தான்!(நரகம்தான்) 40:9 யஜீர்வேதம் படி !
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும்
இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான்.
ஆனால் முஸ்லிமோ .. மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால்……..
விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.
அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.
(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
குறிப்பு:
மேலும் இந்த பதிவின் நோக்கம் யாரையும் இந்திய நாட்டில் இறைவன் கொடுத்த அந்த கால தொலைந்து போன இஸ்லாத்தை அவர்களுக்கு தெரிவிப்பதும் நோக்கமாகும். அதற்க்கு அவர்கள் வேதத்தில் இருந்து காட்டுவதே சிறந்தது. ஆகையால் வேதத்தில் ஈன இப்படி வசனங்கள் உள்ளன என்று சிந்திப்பது அவசியம். ஏற்பவர் ஏற்கட்டும், மறுப்பவர் மறுக்கட்டும்!
அதையும் மீறி, யாரையும் நிர்பந்தப்படுத்த படுத்த யாருக்கும் உரிமையில்லை.
மேலும் இந்த பதிவின் நோக்கம் யாரையும் இந்திய நாட்டில் இறைவன் கொடுத்த அந்த கால தொலைந்து போன இஸ்லாத்தை அவர்களுக்கு தெரிவிப்பதும் நோக்கமாகும். அதற்க்கு அவர்கள் வேதத்தில் இருந்து காட்டுவதே சிறந்தது. ஆகையால் வேதத்தில் ஈன இப்படி வசனங்கள் உள்ளன என்று சிந்திப்பது அவசியம். ஏற்பவர் ஏற்கட்டும், மறுப்பவர் மறுக்கட்டும்!
அதையும் மீறி, யாரையும் நிர்பந்தப்படுத்த படுத்த யாருக்கும் உரிமையில்லை.
Related: