கேள்வி#5 : முஸ்லீம்களுக்கு மட்டும்தான் சுவர்க்கம் என்றால் இறைவன் ஏன் மற்றவர்களை படைக்க வேண்டும்.. எல்லோரையும் முஸ்லிம்களாகவே படைத்திருக்கலாமே?


இறைவன் மாயையும் அல்ல, தத்துவமும் அல்ல, மற்றும் சூத்திரமும் அல்ல இப்படி சொல்வது எல்லாம் மனிதனின் கண்டுபிடிப்புகள்.

ஒவ்வொரு முறையும், சொந்த மக்களுடைய தூதர் மறைவிற்கு பிறகு,


எப்போது மக்கள் (மீண்டும்) வழி தவறுகிரார்களோ அவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை செய்ய மீண்டும் மீண்டும் இறைவன் வரிசையாக தூதுவர்களை அனுப்பிக் கொண்டே இருந்தான் மக்கள் இறைவனை நேர்வழி காட்டாது போனான் என்று நீங்கள் அவனை குற்றம் பிடிக்காத்திருக்க.



மக்களில் ஏற்றுக் கொள்பவர் ஏற்றனர்-நிராகரிப்போர் நிராகரித்தனர்-நிராகரிகின்றனர் இன்றும்.


நிராகரிப்போர் தங்கள் மனோ இச்சைபடியும் முன்னோர்களின் மார்க்கத்தில் பெருமை கொண்டும் அதிலேயே மூழ்கி கிடந்தனர்/ கிடக்கின்றனர். அவர்களை சிலர் கடவுளாகவும் ஆக்கிகொண்டனர் அல்லது அவரை பற்றி அவதூறு உருவாகுகின்றனர், மற்றவர்களை வழி கெடுப்பதற்காக..  அதனால்தான் இறைவன் குரானில் கேட்கிறான், “அறிவுள்ளவரும் அறிவற்றவரும் சமமாவார்களா?

மேலும் குரானில் அவன் அதற்கு முன் அனுப்பிய தூதுவர்களை உண்மை படுத்தியும் வேதங்களை உண்மை படுத்தியும் வசனங்கள் இறக்கினான்.. மேலும் துதர்களுக்க் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தும் இருக்கிறான்..சுமார் 25 தூதர்களின் பெயரையும் (மட்டும் குறிப்பிட்டு) இதுவரை உலகமனைதுக்கும் கொடுக்கப்பட்ட 4 வேதங்கள் எவை என்று கூறி அதை மெயபடுதி இருக்கிறான்.. ஆக உலகம் முழுமைக்கும் அவன் வழிகாட்டிக் கொண்டே இருந்திரிகிறான்..

உங்களை போன்றவர்களே பிந்தைய வேதங்களையும் பிந்தைய தூதர்களும் நிராகரித்து பல்வேறு மாற்றமடைந்த கற்பனை கதைகளால் நிரம்பிய  வேதத்தையும், தூதர்களையே கடவுளாக, அவன் அவ்தாரமாக இறைவன் தூதர்களை மாற்றிவிட்டு.. சிந்திக்கவும் மனமில்லாமல்.. முன்னோர்களின்  பாதையிலேயே விழுந்து கிடக்கிறீர்..

இந்திய பிரதேச மக்கள் இறைவனை சிவன் என்றும், இமய மலையில் அமர்ந்து தவம் செய்பவனாகவும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இறைவனை உருவகப் படுதிள்ளனர். இல்லாத இறைவனுக்கு பல்வேறு வர்ணங்களையும் சதூர்த்திகளையும் வழிபாடுகளையும் செய்கின்றனர்... ஓரே இறைவனைத்தான் வழிபடுகின்றோம் என்றும் அவனே மனிதனாக பல அவதாரமாக வந்ததாக அழகாக பேசுகின்றனர், ஆனால் பல தெய்வ வழிபாட்டையே பல கதைகள் சொல்லி மேற்கொள்கின்றனர்.


ஆனால் இவர்களில் 99 சதவீதம் பெயரை கேட்டால்என்ன சொல்லுவார்கள் என்றால், “ எல்லாமே கடவுள்கள்தான் என்பார்கள், அதில் சொல்லப் பட்ட கதைகளை பிள்ளை குட்டிகள் உண்மை என்றும் என்பார்கள், சடங்குகள் என்று பூசாரிகள் அல்லது பெரியவர்கள் எதை சொல்கிறாரோ அதையே அப்படியே என்பார்கள், பிறகு அவைகளுக்கு இதிலேயே இதற்கு சக்தி இல்லை அந்த கோவிலுக்கு போ அது நடக்கும் பலிக்கும் என்பார்கள். ஒன்றை விட அடுத்த்தது மிகைத்து என்று சொல்வது எப்படி ஒரு கடவுள் வழிபாடு ஆகும்?



ஏதேனும் பிரச்னை என்றால் கடவுளிடம் கேட்டுப் பெறுவதை விட்டு விட்டு அவனைத்தவிர வேறு முறைகளில் முயற்சி செய்யப் பட நிர்பந்திக்கப் படுகிறார்கள்.. இதை சில இடைத்தரகர்களும், பூசாரிகளும் மக்கள் பணத்தை பிடுங்க பரிகாரம், வாஸ்து, நல்ல நேரம், கெட்ட நேரம், ஜோசியம், ராசிக் கற்கள், பஞ்சாங்கம், தோஷம் கழிதல் என்று இறைவனை விட்டு திருப்பபடுகின்றனர். இவைகளுக்கும் சக்தி உண்டு என்று நம்புகிண்றனர். இறைவன் நாடிய படி நடக்குமா? இல்லை இவர்களின் செயல்களுக்கு கட்டுப்பட்டு இறைவன் இவர்களின் செயல்களை மாற்றி எழுதுவானா?     


இப்படி மனித மனங்களை குழப்பி விட்டு, நாங்கள் ஓர் இறைவனை வழிபடுகிறோம் என்று சொல்லும் செயல்களை ஏக இறைவன் ஏற்றுக் கொள்வான் என்று நம்பும் இவர்கள் சொர்க்கத்தையும் பரிசாக தருவான் என்று நம்புகின்றனர். இதற்கு மேல் நான் என்ன சொல்ல? இறைவன் நேராக ஒவ்வொருவருக்கும் கட்சி தர வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றார்களா? சிந்திக்கும் அறிவை கொடுத்துதானே மக்களை இறைவன் உலகத்திற்கு அனுப்பினான்.. மறுமைக்காக இந்த உலகில் தயார் செய்யம் பொருட்டு.. ஏன் இந்த பெருமை? பிடிவாதம்?

உங்களுக்கும் எனக்கும் பொதுவான கடவுளை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னால் கோபம் கொள்கின்றனர்... எங்கள் வழிபாடுகள் சரியே என்று வாதம் செய்கிறார்கள்..

இந்திய பிரதேசத்தில் இவர்கள்...
- எப்படி தங்களுடைய கடவுள் மட்டுமே சரி என்கிறார்களோ...
- தங்களுடைய வழிபாடுகளில் எந்த குறையும் இல்லை என்கிறார்களோ...     
- தங்கள் வாழ்க்கை முறையே சரி என்கிறார்களோ...
- அதே போல்தான் உலகத்தில் உள்ள மற்ற பகுதியினரும் சிந்திப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்வது இல்லை..

அவர்களை போல்தான் மற்ற பகுதியினரும்... கண்டதே காட்சி கொண்டதே குலம் என்பதாகவே இருக்கின்றனர்

மேலும் அணைத்து பிராந்தியத்தில் இருப்பவரும் தத்தமது இறைவனே உண்மை, வேதமே உண்மை, வழிப்பாட்டுமுறையே சரி என்கின்றனர். 

பொதுவான ஒரு கடவுள் தான் அனைவரையும் படைடிருக்க முடியும்.. முஸ்லிம்களை அல்லாவும், கிறிஸ்துவர்களை ஏசுவும், இந்துக்களை பிரம்மாவும், புத்தர்களை புத்தரும் தனித்தனியாக படைதிருக்க  முடியாது.

அதே போல் ஒவ்வொரு நாடும் இனமும் ஒவ்வொரு கடவுளை உற்பத்தி செய்து வைத்துள்ளது. உற்பத்தி செய்தவனின் குணாதிசயங்களை அந்த கடவுளும் பெற்றிருக்கின்றன. மனிதன் அவன் எதை வெறுக்கிறானோ அவைகளை அந்த கடவுள்களும் வெறுக்கும் எவற்றை அவர்கள் நேசிகிரார்களோ அவற்றை அவைகள் நேசிக்கும்.

- நீக்ரோக்கள் தங்கள் கடவுள்களை கருப்புத் தோலுடனும், சுருட்டை முடியோடும், சிருச்டிதார்கள்.
- மங்கோலியர்கள் இறைவனுக்கு மஞ்சள் நிறம் கொடுத்தனர்,
- கிரேக்கர்களை போன்று ஜியசும்,
- ரோமபுரியர் போன்று ஜோவும் சிருஷ்டிக்கப்பட்டனர்.
- எகிப்திய கடவுள்கள் எகிப்தியர் முகத்தையும்,
- இந்திய கடவுள்கள் இந்தியர் முகத்தையும் பெற்று இருகின்றனர்.
- குளிர் பிரதேசங்களில் உள்ள கடவுள்கள் கம்பளி ஆடைகளையும்,
- உஷ்ண பிரதேசங்களில் உள்ள கடவுள்கள் நிர்வாணமாகவும் காட்சி தருகின்றன..
- சில வாகனங்களின் மீதும்..சில மிருகங்களின் மீதும் அமர்ந்த வண்ணம் கட்சி அளிப்பதும் உண்டு.

கடவுளை பற்றிய இந்த முரண்பட்ட கொள்கையே பல மதங்கள் தோன்ற காரணம். ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டுள்ள வேதமே உண்மை என்றும் தாங்கள் வழிபடும் தெய்வமே உண்மை என்றும், கூறுகின்றனர்..

. கடவுள் ஒருவனாக இருக்க அவன் இவ்வளவு மதங்களை தோற்றுவித்திருப்பானா..?

. மனிதர்கள் கருது வேருபாடுடன் பிளவுபட, சண்டை போட்டுக்கொள்ள  அனுமதிபானா?

. முற்றிலும் ஒன்றுக்கொன்று முரண்படும் கொள்கைகள் அனைத்தும் அந்த ஓரே இறைவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று அந்த அந்த மக்கள் நினைப்பது சரியா?

. எல்லா மக்களையும் ஒன்று படுத்த நேர்வழி படுத்த தூதர்களை அனுப்பியிருக்கமாடான் என்று நீர் நினைகிர்ரீரா?

. சரி எது தவறு எது என்று பிரித்தரிவிக்க மற்ற மக்களுக்கும் உங்களை போல.. வேதத்தை அனுப்பி இருக்கமாட்டான் என்று நீர் நம்புகிறீர்களா
   
. அவனை எப்படி கருத்து வேறுபாடு இன்றி ஓரே மாதிரியாக வழிபட உலக மக்கள் அனைவருக்கும் ஓரே மாதிரியான கடவுள் கொள்கைகளை உலக முழுக்க அனுப்பியிருப்பானா? இல்லை எப்படி வேண்டுமானாலும் என்னை வழிபடுங்கள் என்றும் யாரை வேன்டுமானாலும் வணங்குகள் என்று பொறுப்பை தட்டிக் கழிதிருப்பானா?

ஏற்றுக் கொள்ளவிட்டால் நீர் மிகக் குறைவாக சிந்திகிறீர்!

இறைவன் கூறுகிறான்,

நான் தூதர்களை அனுப்பாத எந்த சமுதாயமும் இந்த உலகத்தில் இல்லை என்று”, நன்மை எது தீமை எது என்று அறிவிக்காமல் எப்படி இறைவன் மறுமையில் மக்களுக்கு இடையே தீர்பளிக்க முடியும்? நீர் அந்நாளில் இறைவனிடம் தர்க்கம் செய்ய மாட்ரீரா? அவனுக்கு ஓரே நியாயம் எனக்கொரு நியாயமா என்று?

ஏற்றுக் கொள்பவருக்கும் நிராகரிபவருக்கும் தீர்ப்பு இறைவன் இடத்தில். அதனால் தான் இறைவன் கூறுகிறான் நன்மையையும் தீமையும் சமம் இல்லை என்று.  நல்ல முடிவு பயபக்தியாலர்களுக்கே, எல்லோரையும் எந்த இறைவன் படைத்தானோ அவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.. அவனை போற்றி புகழ்கிறேன்.