கேள்வி: கடவுள் ஒன்றுதான், அதில் உடன்படுகிறோம் ஆனால் நீங்கள் சொல்லும் அல்லாஹ்தான் அந்த ஒரு கடவுள் என்று சொல்வது எப்படி?
இஸ்லாம் நபிகள்(ஸல்) 1400 ஆண்டுகளுக்கு முன் உருவாகியது புதிய மதமமும் இல்லை, நபிகள் நாயகமும் அதன் நிறுவனர் இல்லை. இறைவனை நாம் தமிழில் கடவுள், தேவன் என்று சொல்வது போல உலகத்தை எந்த ஒரு இறைவன் படைத்தது இருக்க முடியுமோ அவனை அரபு மொழியில் அல்லாஹ் என்று அன்றைய காலத்தில் அழைத்தனர்.
முஸ்லிம்களின் வேதம் இவ்வாறு கூறுகிறது: (யுத, கிருஸ்தவ மத தூதர்களுக்கு முன் வந்த,) ஆப்ரஹாம் (இப்ராஹீம்) நபி கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று. (குரான் 2:258)
எனவேதான் அல்லாஹ் என்கிற ஒருவன் முஸ்லிம்களின் கடவுள் என்று யாராகிலும் நினைப்பார் என்றால் அது அவர்களின் அறியாமை என்பது முஸ்லிம்களின் கூற்று. அரபு மக்கள் பயன்படுத்தும் பைபிளில் இறைவனை அல்லாஹ் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் மலேசியாவில் முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் இறைவனை குறிக்க "அல்லாஹ்" என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று சட்டம் இயற்றியது. இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன? குரான் கடவுளை பற்றி இவ்வாறு சொல்கிறது:
1.கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
2.அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
3.அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
4.மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். (அத்தியாயம் 112:1-4)
இந்த அத்தியாயத்தில் குரான் சுட்டிக் காட்டும் இறைவனுக்கு சில பண்புகள் உள்ளன. பிறப்பு, இறப்பு கிடையாது, அவனுக்கு நிகராக எதுவும் இல்லை. என்பது போன்றவை. ஆனால் மற்றவர்கள் கூறும் இறைவனுக்கு குடும்பமும் ,பிறப்பும், இருக்கின்றன, இன்னதுதான் உருவம் என்று இறைவனுக்கு நிகராக ஒரு உருவத்தை காட்ட முடியும்.
உதாரணத்திற்கு எதை ஒன்றையும் ஆரம்பிக்கும் முன் கணபதி ஹோமத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆரம்பிப்பர். அந்த கணபதி என்றவுடன் ஒரு யானை முக தலையும், மனித உடளும் உடைய கலப்பு உருவம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த கணபதிக்கு பிறப்பு உண்டு, இறப்பும் இருந்தது. பெற்றோர்கள் இருகிறார்கள். இவை அனைத்தும் குரான் கூறும் கடவுள் இலக்கனதிற்கு முரணாக உள்ளது என்பது போன்றவை அல்லாஹ்வின் இடத்தில் கணபதியை வைப்பதில் முஸ்லிம்களுக்கு சிரமம் இருக்கிறது. சரி நீங்கள் வைகாட்டி என்ன நாங்கள் கணபதியை அல்லாஹ் என்று அழைக்கிறோம் என்று கூறுபவரும் இருகின்றனர்.
முஸ்லிம் அல்லாதவர்கள் கூறும் இறைவனும் முஸ்லிம்கள் கூறும் இறைவனும் ஒன்று போல இல்லை, அதனால் தேவை இல்லாத பெயர் குழப்பம் வேண்டாம் என்பதற்க்காகத்தான் மலேசியா இந்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. நபிகள் நாயகத்தின் தந்தை பெயர் கூட அப்துல்லாஹ். அதாவது அல்லாஹ்வின் அடிமை என்பதுதான அதன் பொருள். எனவே அல்லாஹ் என்பது நபிகள் நாயகமோ, அரபு இனமோ கண்டுபிடித்த புதுக் கடவுள் இல்லை என்பதை விளங்கலாம்.
Related:
குரான் கூறும் இறைவன் மட்டும்தான் ஏற்புடையதா?