கேள்வி#2 :இஸ்லாம் மாற்று மதத்தை ஏன் தவறு பற்றி சொல்கிறது?


1. இறைவன் தடுத்த உருவ வழிபாடு மற்றும் பல தெய்வ வழிபாடு கொண்டிருத்தல்,

2.  (அல்லது) உருவ வழிபாடு மற்றும் பல தெய்வ வழிபாடு இல்லை என்று  சொல்லிக் கொண்டும்  ஆனால் அதிலேயே மூழ்கி இருத்தல்,

3. இறைவன் மீதும் அவன் கொடுத்த  வேதங்களிலும் உங்களுக்க் சவுகாரியமாக இடை சொருகல் செய்து விட்டு அதிலேயே மூழ்கி இருத்தல்,


4. அதை திருத்த வந்த இறை தூதர்களின் மீது அபாண்டமாக பழி போடுதல், கொலை செய்தல், இட்டுக்கட்டுதல்..

5. அல்லது அவரையும் ஒரு கடவுள் அவதாரமாக கருதி ஒரு இறைவனை வழி பட சொன்னால் அவரையும் கடவுள் லிஸ்டில் கூறிக்கொண்டது,   


6. தவறா சரியா என்று கூட தெரிய விரும்பாமல் மூதாதையர்களின் வழியை கண்மூடி தனமாக நடப்பது அல்லது அதுவே சிறந்தது என்று பெருமை பேசுவது.

( போன்ற இன்னும் பல..)

குரான் கூறுகின்றது...
7:194நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
7:195அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.
7:196“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.
7:197அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.


அதனால் மக்களை நேர்வழி படுத்த பல்வேறு காலக் கட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பல் வேறு தூதர்களை இறைவன் அனுப்பினான். அவர்களுக்கு நேர்வழி காட்டாமல், சரி எது தவறு எது அறிவிக்காமல் மக்களின் செய்யகளுக்கு இறைவன் மறுமையில் தீர்பளித்தால் அது சரியாக இருக்குமா? இருக்காது. அது போல தூதர்கள் அனுப்பபடாத சமுதாயம் இல்லை.  

மக்களில் பெரும்பான்மையோர் அவர்களை கடவுளாக எடுத்துக் கொண்டார்கள் அல்லது நிராகரித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த தூதர்களின் வரிசையில் முற்றுப் புள்ளியாக உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக வந்தவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவருக்கு பின் வேறு தூதுவர் கிடையாது. அதனால் அவரின் வழி நடப்பதால் மறுமை நமக்கு நல்லதாக அமையும். 


 அதற்கு நிறைய அத்தாட்சிகளை இறைவன் குரானிலும் அதற்கு முன்னர் உள்ள வேதங்களிலும் காட்டி உள்ளான். அவராக குரானை எழுதிக் கொண்டார் என்று நீங்கள் சொல்லாதிருக்க அவரை கல்வியற்றவராக தான் ஆக்கியிருந்தான் இறைவன்.

7:157எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; 
அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; 
எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
7:158(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” 
7:188(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” 

நபிகள் நாயகம் எதற்காக அனுப்பப் பட்டார்கள்?
அவர் உலகத்திற்கு கடைசியாக அனுப்பப்பட்ட தூதுவர். அவரின் வேலை... 
- ஓரே இறைவன் பக்கம் மக்களை அழைப்பதும், அவனை உருவமற்ற முறையில் முன் சொன்ன வேதங்களின் படி வழி படுவதும்,
- உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான  நன்மை தீமை(gGood & Bad or Do’s & Don’ts) பற்றி பிரித்து அறிவிக்கிற குரானின் படி நடந்து, மக்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டியதும்
- பிரிவுகளற்ற ஓரே சமுதாயம் அடங்கியதாக உலகம் முழுமையும்  ஆக்கவும்(அவர்களாக பிரிந்து கொண்டால் அது வேறு விஷயம்)
- அவர்களுக்கு இடையே உயர்வு தாழ்வுகளை நீக்கி இனம், மொழி, நாடுகளை கடந்து ஒன்று படவும்,
- உணவு தானியங்களை வீணடிக்காமல் சரியான முறையிலே வழிபடவும்
- பூசாரிகள் என்கிற இடைதரகர்களிடம் மக்கள் சிக்காமல், சாதாரண மனிதன் கூட ஏக இறைவனை சரியான(மனித கற்பனைகள் கலக்காமல்) முறைலிலே அறியவும், காணிக்கை என்ற பெயரில் மக்களின் பொருள்களை சுரண்டி வழிபாட்டு தளங்களில் நரம்பி யாருக்கும் பயன் படாது போவதை தடுக்கவும்,  
- மக்கள் உலக அழிவு நாள் ஏற்படும் போது என்னென்ன குழப்பங்கள் ஏற்படும் என்பதை அறிவித்து அப்போது நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் கட்டி சென்றார்.
இவை அனைத்தையும் அவர் தமது சொந்த சிந்தனை படி செய்யவில்லை, அவர் கூறுகிறார், “எனக்கு அறிவித்து தந்ததை தவிர வேறு எனக்கு எதுவும் தெரியாது”. ஆவராக குரானை எழுதிக் கொண்டார் என்று நீங்கள் கூறாதிருக்க அவரை இறைவன் அனாதையாகவும், கல்வி அறிவு கொடுக்கப் படாதவராகவும், நற்பண்பு உள்ளவராகவும் இறைவன் படைதான்.
நபித்துவம் கிடைபதற்கு முன்பே, அவருடைய மக்கத்து மக்கள் அவரை அல்-அமீன்(நம்பிக்கைக்கு உரியவர்) என்றே அழைத்தனர். அவருக்கு நபித்துவம் கிடைப்பதற்கு பின்பு மக்கள் அவரை ஓரே ஒரு காரணத்திற்காகதான் எதிர்த்தனர்.
அது..
- அவர்கள் முன்னோர்கள் செய்யும் உருவ, பல தெய்வ வழிபாடு முறைகள் தவறு என்று கூறியமையாலும் மற்றும்
- வழிபாடு என்கிற பெயரில் அவர்கள் செய்த அறிவற்ற சடங்குகளை  மறுத்தாலும்தான்...
- குடி, விபசாரம்(மாற்றாந்தாய் என்று கூட பார்க்காமல்), பெண் ககுழந்தைகளை உயிருடன் புதைத்தல், ஓயா இனச்சண்டை போன்ற மோசமான வழக்கை முறைகளை எதிர்த்ததால்
........தவிர வேறில்லை...

- ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அவர் கூறும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களையும் எப்படிப்பட்ட சித்ரவதைகளை செய்தார்கள் என்று தெரியுமா?
பலத்த எதிர்ப்பாலர்களுக்கு இடையே எந்த ஒரு இறைவன் இந்த மக்களை வழிகாட்ட அனுப்பினானோ அவனுடைய வேதத்தை பெற்றுக் கொண்டு மக்களை நல்வழி நடத்தினார்கள்.

- ஒரு சமயம் மக்கா மக்கள் கூட அவரை விரட்டியடித்தனர் சொந்த நாட்டை விட்டு முஸ்லிம்களும் நாட்டை விட்டே பயந்து வெளியேறினர்.

- ஏற்றுக் கொண்ட மதினா மக்களுக்கு இடையே, முதுகில் குத்த சான்ஸ் கிடைக்காதா என்று அலையும் நயவஞ்சகர்களுக்கு மத்தியலும், எதிரிகளான யூதர்கள் கிறிஸ்தவர்களின் மத்தியில் இருந்து கொண்டு இன்று உலகில் இவ்வளவு ஓரிறைவாதிகளை ஏற்படுதிள்ளர்களே அது என்ன சாதாரணமா?

- எவ்வளவு பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார் தெரியுமா?..

அதனால் தூர இருந்து காலம் முழுவதும்  சந்தேகப் பட்டுக் கொண்டிருக்காமல் சரியானவர்களிடம் சரியான விஷயங்களை தெரிந்து கொள்ளவும். பொய்யர்களை நம்பி மோசம் போக வேண்டாம். உங்களுடைய கான்சியஸ்-ஐ (உள் மனதை) கேட்டு நடக்கவும். இறைவன் நமக்கு நல்லருள் புரிவானாக. ஆமின்.

7:2(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
7:3(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
7:4(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
7:5நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்: “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
7:6யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
7:7ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
7:8அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
7:9யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
7:10(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். 



ஆகவே மக்களே,


4:1மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; 



ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.