கேள்வி#6 : நபிகள் நாயகம்(ஸல்) ஒரு சிறுமியை மணம் முடித்தாரா?



நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏழு வயது சிறுமியை கல்யாணம் செய்யவில்லையா? இதுCHILD ABUSING இல்லையா? நபிகள் என்று சொல்பவரின் இந்த செயல் ஏற்புடையது அன்று என்றும் பயங்கரமான விமர்சனங்கள் இன்றும் முஸ்லிம் அல்லாதோர் கூறுவதை கேட்கிறோம். இஸ்லாத்தை பற்றி அவதூறு செய்ய கிடைத்த அல்வாதுண்டு விஷயமாக ஆகிவிட்டதை நாம் காணுகிறோம்.



மூன்றாவதாக நபிகளார் ஆயிஷா (ரலி) அவர்களை இறை ஆணை படி மனமுடிதார்கள். ஆயிஷா(ரலி) அவர்களின் வயது பற்றிய விஷயத்தில் மார்க்க அறிஞகர்களுகிடையே இரண்டு விதமான கருத்து நிலவுகிறது. ஒன்று ஆயிஷா அவர்கள் 6 வயதில் திருமணம் செய்யப்பட்டார் என்றும் இன்னொன்று 15 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்யப்பட்டார் என்றும் கருத்து நிலவுகிறது. 


அல்லாஹ்வே மிக அறிந்தவன்! 

ஆனால் அவர் பெரியவளாக பருவமைந்த பிறகே இல்லறம் நடத்தினார்கள். அதற்கு முன் அவர் இல்லறம் நடத்தி இருந்தால் சிறுமியுடன் உடலுறவு கொண்டவர் என்று குறை கூறலாம். ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை, இருந்தும் நபிகளாரை பற்றி அவதூறை பரப்புவதில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் அன்று முதல் இன்று வரை தங்களது சக்தியை உபயோகப் படுத்துகின்றனர்.

இஸ்லாத்தின் தூண் போல 2000க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அறிவித்த பெருமை அன்னை ஆயிஷாவை சேரும், ஷரியா மற்றும் குரான் விளக்கங்களை நுணுக்கத்துடன் விளக்கவும், பெண்கள் இஸ்லாத்தின் விளக்கங்களை தெரிந்து கொள்ள ஒரு பல்கலைகழகமாக விளங்கினார்கள் அதிக நினைவு திறமையுடன் விளங்கிய அவர்கள் குறைந்த வயதுடையவர்களாக இருந்தமையால் நபிகளாரின் மறைவுக்கு பின்பும் 48 ஆணடுகள் அவர்கள் சேவை செய்ய முடிந்தது.


மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஸ்ஸாம் பின் உறவா ஆவார். அவர் ஒரு ஆதாரப் பூர்வமான அறிவிப்பாளர்.

உண்மையில் அவர் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்த போது அவர் சிறுமியல்ல என்பதை ஆதாரப் பூர்வம்மாக காட்டுவோம். 

அல்லாஹ் போதுமானவன்! 

சரி இப்போது விஷியத்திற்கு வருவோம்.

நபிகள் நாயகம் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்த போது அவர்களுக்கு வயது 7 அல்ல 17 அல்லது 18! அதற்கான ஆதாரத்தை பார்க்கலாம். இஸ்லாமிக் வாய்ஸ் மார்ச் 2001 ல் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.. கேப்டன் அம்ருதீன் அவர்கள் அதன் மூலத்தை தமிழாக்கம் செய்து, “நபிகள் நாயகம் (ஸல்) மைனர் பெண்ணை மனந்தார்களா? என்கிற ஓர் ஆய்வு புத்தகத்தை வெளியிட்டு இருந்தார்....


மேலும் உபரியாக எவ்வாறு மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஸ்ஸாம் பின் உறவா வின் இந்த ஹதீஸில் தவறு ஏற்பட்ட காரணத்தை அழகாக விவரித்துள்ளார்.

பிளஸ் பாயிண்ட் ஆக ministry of Justice, சவூதியின் சரிசெய்யப்பட்ட திருமண சட்டத்தை மேற்கொள காட்டியுள்ளார். அதாவது ஏப்ரல் 2009 இல் அந்நாட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக ஆக்கியுள்ளது, இந்த சட்டம் இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென்று இப்பொழுது கொண்டுவந்ததன் காரணம் சற்று வித்தியாசமானது என்றாலும் சரியான சட்டத்தை இயற்றி இருக்கிறார்கள்.


கடைசியாக அந்த தவறான ஹதீஸை கிராஸ் செக் செய்து செய்யப்பட்ட ஆய்வு தாமத மானது என்றாலும், சரி எது தவறு எது என்று தெரிந்து விட்டது, விமர்சகளின் விமர்சனத்திற்கும் பதில் கிடைத்து விட்டது. ஆகையால் நான் அந்த புத்தகத்தின் முக்கியமான பகுதிகளை இணைத்துள்ளேன்.

நடுநிலை உடைய மக்கள் புரிந்து கொண்டால் அதுவே நமக்கு போதுமானது. (என்றாலும்) இந்த ஒர வஞ்சனை உடையவர்கள் பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டார்கள்..
இறைவன் இந்த மக்களுக்கு நேர்வழி காட்டுவானாக.. 


தவறான ஹதிஸ் அறிவிக்கபட்டதன் பின்னணி

ஹஸ்ஸாம் பின் உர்வா தமது வயோதிக காலத்தில் ஈராக்கிற்கு இடம் பெயர்ந்து போனார். அவர் அங்கிருந்த காலத்தில் மறதியால் மனநிலை பாதிக்கப்பட்டு போனார். மேற்கண்ட ஹதீஸ் ஈராக்கில் இருந்த போது அறிவிக்கப்பட்டதே, அதனால் அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல என்று இமாம் மாலிக்(ரஹ்) கூறுகின்றார். இந்த இமாம் மாலிக்(ரஹ்)  என்பவர் ஹஸ்ஸாம் பின் உர்வா-வின் மாணவர், இவர் தனது ஆசிரியர் அறிவித்த பல ஹதீசுகளை முஅத்தா(MUATTA) என்ற ஹதீஸ் தொகுப்பில் சேர்த்திருக்கிறார். ஆனால் அவர் ஆசிரியர் ஈராக்கிற்கு போன பிறகு மனநிலை பாதித்த பிறகு அறிவித்த பல ஹதீசுகளை ஏற்க்கதக்கதல்ல என்று கூறுகின்றார். ஆதாரனப்பூர்வ ஆறு ஹதீஸ் தொகுப்புகளை தொகுத்தவர் அரேபியர் அல்ல, அதனால் இந்த உண்மையை அவர்கள் காண தவறிவிட்டார்கள்.


அப்படியானால் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு திருமணம் எந்த வயதில் நடந்தது? அதை உரிதிபடுதும் ஆதாரங்கள் எவை என்ற கேள்வி எழுகின்றன. ஆயிஷா(ரலி) அவர்களை நபிகளார்(ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது ஆயிஷா(ரலி) அவர்களுக்கு வயது 17 ஆகும். அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து மதினா சென்று தம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த போது அவர்களின் வயது 19 ஆகும். இந்த மறுக்க முடியாத ஆதாரங்களை கீழே காண்போம்.


முதல் ஆதாரம்:

மிஷ்காத்’ என்று அறியப்படும் புகழ்மிக்க ஹதீஸ் தொகுப்பில் அதன் ஆசிரியர் ஆயிஷா (ரலி) அவர்களின் மூத்த சகோதரியின் வழக்கை குறிப்பை கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.


அவர் அஸ்மா. அபுபக்கர் சித்தீகின் மகளார்....அவர் அப்துல்லா பின் ஜுபைரின் தாய்.... அவருடைய சகோதரி ஆயிஷாவை விட 10 வயது மூத்தவர்.... அவர் ஹிஜ்ரி 73-இல் 100 வயதில் மரணமடைந்தார்.” மேற்கண்ட அறிவிப்பில் அறிஞர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இப்போது ஒரு சிறிய கணிதம் போடுவோம்.

அஸ்மா(ரலி) 100வது வயதில் ஹிஜ்ரி 73-இல் மரணம் அடைந்ததால் ஹிஜ்ரத்தின் போது அஸ்மா(ரலி) அவர்களின் வயது 27 (100-73=27) ஆகும். அவர் ஹிஜ்ரி 73-இன் தொடக்கத்தில் மரணமடைந்திருந்தால் ஹிஜ்ரத்தின் போது அவருடைய வயது 28 (100-72=28) ஆகும்.


ஆயிஷா(ரலி) அவர்களை விட 10 ஆண்டுகள் மூத்தவர் என்பதால் ஹிஜ்ரத்தின் போது ஆயிஷா(ரலி) அவர்களின் வயது 18 (28-10) ஆகும். அதற்க்கு ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் ஆனதென்றால், திருமணத்தின் போது அவரின் வயது 17 ஆகும். அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து மதீனாவில் நபிகள்(ஸல்) அவர்களிடம் சேர்த்த போது அவருக்கு வயது 19 ஆகும்.


இரண்டாவது ஆதாரம்:

நபிகளார் நபித்துவம் பெற்று அழைப்புப் பணி ஆரம்பித்த போது, அதன் ஆரம்பக் காலங்களிலேயே இஸ்லாத்தை தழுவியவர்களில் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும் ஒருவர். இஸ்லாத்தை தழுவியர்களில் அவர்  20-வது ஆள் அப்போது அவருக்கு வயது 5 என்று இபுன் ஹிஷாம் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். நபிகளார்(ஸல்) அவர்கள் மக்காவில் 13 ஆண்டுகள் அழைப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தார், பிறகு அவர் மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டில் இருந்துதான் ஹிஜ்ரி வருட கணக்கு ஆரம்பமாகிறது. அப்படியென்றால் அவருக்கு வயது      18 (13+5=18) என்பது உறுதியாகிறது.


அதற்க்கு மாற்றமாக இப்படி கற்பனை செய்து பாப்போம். ஹிஜ்ரத்தின்  போது அவருக்கு வயது 8 என்று இருந்தால் நபிகளார்(ஸல்) அவர்கள் அழைப்பு பணியை 13 ஆண்டுகளுக்கு முன் துவகியிருக்க, (8-13=-5) ஆயிஷா(ரலி) அவர்கள் பிறப்பதற்கு முன் 5 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவினார் என்பது சாத்தியமில்லை. சற்று யோசியுங்கள்.


ஏன் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வயதை நிர்ணயம் செய்யவில்லை?

திருக்குரானில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்திற்கு வயது நிர்ணயம் செய்யவில்லை. அதனால் குழந்தை திருமணத்தை குரான் ஆதரிக்கிறது என்று அர்த்தம் இல்லை. திருமணம் என்பது இருவருக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம், ஆகையினால் அந்த ஒப்பந்தத்தை/நிபந்தனைகளை அறிந்து அவற்றை ஏற்று நடக்கும் அறிவு மற்றும் மணப் பக்குவத்தை அடையும் வயதுதான் திருமணத்திற்கு ஏற்ற வயதாக இருக்க முடியும்.

அதனால்தான் இன்ன வயது என்று நிர்ணயம் திருக்குரான் செய்யவில்லை.

அந்த அறிவும் மனப்பக்குவமும் நாட்டுக்கு நாடு வேறுபாடும். மக்கள் கலாச்சாரமும், சமூக பாசக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெட்ப நிலைகளை பொறுத்து மாறுபடும். ஆகவே திருமண வயதை தீர்மானிப்பது அந்தந்த நாட்டு மக்களும் சமூகமுமே ஆகும். அது எந்த விதத்திலும் ஷரியதுக்கு(இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு) முரன்பட்டதல்ல. 
      






மேலும் உங்களுக்கு அதிகமான தகவல் வேண்டும் பட்சத்தில் (அணைத்து ஆதாரங்களையும் பார்க்க) புத்தகத்தை வாங்கி படிக்கவும்)


(சாஜிதா புக் சென்டர், 248, தம்பு செடிதெரு, முதல் மாடி, சென்னை-1)












Hazrat Ayesha was 17 at Nikah, Not 7


Q. I am a devout Muslim but I get deeply disturbed at the thought of 53 year old prophet Muhammad (peace be upon him) marrying Hazrat Ayesha who was just nine years old. We are unable to explain this in the present society. Surely the reason for this marriage cannot be blatant sensuality. But please tell me how can we explain this to non-Muslims? The age difference defies all logic. It involves questions of pre-puberty alliance, question of psychological incompatibility.
(XXX ; Srinagar)
A. It is widely believed that Hazrat Ayesha’s age was seven years when she was married to the Prophet (Pbuh) and she was 9 when she came to live with him but this is wrong. The fact is that she was 17 when married and 19 at the time of her rukhsati (departure from her home to the husband’s house). There are too many indisputable evidences in favour of this. A few of those are listed below:
1. Imam Waliuddin Muhammad Abdullah Al-Khateeb, the author of famous work on Hadith, namely Mishkaat was also an acknowledged expert of Asma-ur-Rijal (the unique art of research on people). He registered the following about Hazrat Asma at the end of Mishkaat.
“She is Asma, the daughter of Abu Bakr Siddiq...She is the mother of Abdullah Bin Zubair...She was 10 years older than her sister Ayesha...She died at the age of 100 in Makkah in 73AH...”(Mishkaat, Asma-ur-Rijal)
There is unanimity among all the scholars of Asma-ur-Rijal and historians on the above-mentioned facts.
It can be easily computed from above that being 100 years old in 73 AH, Hazrat Asma, daughter of Hazrat Abu Bak’r was at least 27 (100-73) years old at the time of Hijrah of the Prophet (Pbuh). If she died in the beginning of 73 AH, then her age was (100-72) 28 years at Hijrah. It is stated above that she was 10 years older than Hazrat Ayesha. It means Hazrat Ayesha was 18 years old at Hijrah. She came into the Nikah of the Prophet (Pbuh) one year before Hijrah and she shifted to the Prophet’s house two years later. Clearly, she was 17 at the time of nikah and 19 at her rukhsati.
2. The historians have placed Hazrat Ayesha between No. 17 and 20 in the list of those who were earliest to embrace Islam. Ibne Ishaq, the earliest authentic Islamic historian has placed her at No. 18. We also know that Hazrat Umar was the 40th person to embrace Islam and he entered into the faith in the first year of prophethood. It means Hazrat Ayesha was among those few who embraced Islam almost immediately after the declaration of prophethood. She must have been at least 5 years old to be categorized in the list of those who embraced Islam. Therefore her age was 18 when Hijrah came about 13 years later.
Examination of Hazrat Ayesha’s biography through accounts of Asma-ur-Rijal reveals that she was 17 when married to the Prophet and 19 when she came to live with him
Now imagine this. The saying goes that she was 7 at her nikah i.e. 8 at Hijrah that occurred 13 years after the declaration of prophethood. If it were true the declaration of prophethood occurred 5 years before her birth. Did she embrace Islam 5 years prior to her birth?
3. There are indications that she was among those who went to war of Badar but her presence in the battleground of Uhad is beyond doubt. It is in many authentic books of Hadiths and history that she was among those women in Uhad who were carrying water to the injured Sahaba. Now remember the incident of two young boys Rafe and Samra who were 13 and the Prophet (Pbuh) was not permitting them to join forces for their age but later agreed to their pleading as they were very enthusiastic. If Hazrat Ayesha was 10 when Uhad came about in 2 AH, was it possible that a new bride of 10 would have been permitted while the young boys of 13 were refused permission to go to Uhad? On the contrary if she was 18 at Hijrah her age was 20 and fit to take care of the injured in the battlefield when Uhad took place.
There are quite a number of other irrefutable evidences of her age being 19 when she entered into the Prophet’s home 2 years after her Nikah to him.
The wrong notion of her being 7 at marriage is widely accepted (and many Fiqh deductions are erroneously made on its basis) as there is a false report narrated by Hashsham bin Urwah in all the six most authentic collections of Hadith i.e. Sihah-e-Sittah! Hashsham bin Urwah was a very reliable narrator according to all scholars but this fact skipped the scrutiny of the famous Muhaddiseen of Sihah-e-Sittah that Hashsham became forgetful and unbalanced at his old age when he shifted to Iraq. The said report was narrated by him while he was in Iraq. Hashsham was the teacher of Imam Malik and he has accepted a number of Hadiths narrated by him in his collection of Hadith, Muatta. It was none other than Imam Malik, Hahsham’s disciple who declared after Hashsham shifted to Iraq that none of his former teachers’ statements were reliable any more because of his mental condition. The compilers of Sihah-e-Sittah, all being non-Arabs were not aware of it.
Now you know that when Hazrat Ayesha came to the Prophet’s house she was a major. The age difference is still considerable but no law of any land objects to the union of mutual wilful consent of two majors. Remember also that the Prophet (Pbuh) possessed exceptional health at 53 with all his hair black and he being stronger than most youngsters. Besides he was an ideal husband and the history testifies to his ideal care of his young wife with all the psychological considerations.
PROOF SOURCE 3: 
நம்முடைய ஆதங்கம்:
கிருஸ்தவ மத தீர்க்கதரிசிகள் பல ஈனமான தவறுகளை (விபசாரம் உள்ளிட்ட) செய்துள்ளதாக அவர்களுடைய வேதம் கூறுகிறது! அதை எல்லாம் விட்டுவிடுவார்கள், ஆனால் நபிகளார் Legal ஆக செய்த 11  திருமணங்களை விமர்சனம் செய்கிறார்கள், Child abuser என்று நூற்றுக்கணக்கான புத்தகம் எல்லாம் எழுதுவார்கள். 

இந்து சகோதரர்களின் புத்தகங்களில் தசரதன் 1000 பேரை திருமணம் செய்யலாம், அவர்களின் கடவுள் என்று அவர்கள் நம்பக் கூடிய கிருஷ்ணன் பல திருமணங்களை செய்யலாம்.




மேலும் மனு சொல்வதாக கூறுகிறார்கள்...


//
எட்டு வயது தான் கன்னிகைக்குரிய வயது. எட்டு வயது கொஞ்சம் தாண்டினாலும் அவள் கன்னிகைப் பருவத்தை கடந்து விடுகிறாள். அதனால்... அதன் பிறகு அவளுக்கு செய்வது கன்னிகாதானமல்ல. அதாவது கல்யாணமல்ல.

அதனால் எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடு...கல்யாணத்தில் இப்போது நிச்சயதார்த்தம் என ஒரு சடங்கு வைக்கிறார்கள்

//

இஸ்லாம் மேல் காழ்புணர்ச்சியின் காரணமாக, மற்ற சகோதரர்களின் ஆசை ஒருதலை பட்சமானது! ஏன் ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நமது பாட்டி மார்களுக்கு எட்டு பத்து வயதுகளில் திருமணம் என்ற நிகழ்வு வழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம், அது அப்போதைய கலாசாரம் அதற்காக அவர்களை குத்தம் சொல்வது ஏற்புடையது அல்ல, அதே போல் பதினான்கு நூட்ராண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கலாசார நிகழ்வை ஒரு சமுக தலைவர் செய்தார் என்பதால் அவரை குறை சொல்வது நியாயம் இல்லை. சற்று தொலைநோக்கோடு பார்க்க வேண்டும்.

இது பக்கா ஒருதலை பட்சம்!



நண்பர்களே நடுநிலையுடன் பாருங்கள்...