ஏன் என்னை மட்டும் வழிபடு என்று இறைவன் கேட்கிறான் ? அது அவனுக்கு அவசியமா?
அன்பிற்கு உதாரணமாக அன்னையைதான் எல்லோரும் உதாரணம் கூறுவர். அனேக தவறுகளை நாம் செய்தாலும் நம் அன்னை சிறு புன்னகையோடு மன்னித்து விடுவாள். இறைவன் எழுபது தாய் உள்ளம் கொண்டவன் என்று அல்லாஹ் கூறுவதாக இஸ்லாம் கூறுகிறது, அப்படி என்றால் இறைவன் எவ்வளவு மன்னிக்க கூடியவன் என்று நமக்கு விளங்குகிறது. பிறந்தது முதல் இறப்பது வரை எவ்வளவோ பாவங்களை ஒவ்வொருவரும் செய்கின்றனர். என்றாலும் பாவம் செய்த அனைவரும் நரகத்திற்கு செல்வர் என்று அடித்து கூற முடியாது. ஏனென்றால் இறைவன் மன்னித்தால் அத்தனை நம் மோசமான செயல்களுக்கும் விமோசனம் கிடைத்துவிடுகிறது.
இது எல்லாம் ஓகே தான் ஆனால் அவன் தன்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறும்போதுதான் கொஞ்சம் இடிக்கிறது. நாம் முடியாது என்று மறுத்தால் 70 தாய் உள்ளம் கொண்ட அல்லாஹ் சரி என்று விட்டு விட்டு போகாமல் தண்டிப்பேன் .என்று சொல்வதோடு நிற்காமல் நிரந்தரமாக் நரகத்தில் போட்டுவிடுவேன் என்று கூறும் போது, என்னது நிரந்தர நரகமா? ஏன் இறைவன் இதற்கு எல்லாம் கோபப்படுகிறான் என்று அநேகருக்கு ஆச்சரியம் வருகிறது.
இறைவன் தேவையற்றவன் என்று குரான் குறிப்பிடுவதை அனைவரும் அறிவர். அப்படியிருக்க என்னை மட்டுமே நீ வழி பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவை எங்கனம்? என குழப்பமாக உள்ளது என சிலர் கேள்விகளை முன் வைக்கின்றனர். நியாயமான கேள்வி போலவே தெரிகிறது என்றாலும் இதை கொஞ்சம் ஆழமாக அலசுவோம். பதிலை பார்பதற்கு முன் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
உதாரணத்திற்கு நமது அன்னையை எடுத்துக் கொள்வோம். அன்னை நாம் மீது பாசமானவர்தான் என்றாலும் நாம் என்ன செய்தாலும் மன்னித்து விடுவாறா? என்று கேட்டால் இல்லை என்பதே அனைவரது பதிலாக இருக்கும். எப்படி? என்ன தான் பெற்ற தாயாக இருந்தாலும் எல்லா விஷயங்களையும் நாம் மனம் திறந்து பேசிவிடமுடியாது. என்பதை விளக்க ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.
ஒரு மகனுக்கு தன்னுடைய பிறப்பில் வரக் கூடாத சந்தேகம் வந்து விட்டது என வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் தாயிடம்,சென்று நேரடியாகவே ,"என்னுடைய தந்தை உங்கள் கணவர் இல்லை என் தந்தை வேறு ஒருவர் என நினைக்கிறேன் " என்று கூறுகிறான். எல்லாவற்றையும் மண்ணித்து அரவணைக்க கூடிய அன்னை இப்போது என்ன செய்வார்? நடப்பது வேறாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.